முக்கிய செய்திகள்

இந்திய பொருளாதார கடல் எல்லைக்குள் அமெரிக்க கப்பல் பயிற்சி

28

இலட்சத்தீவுகளுக்கு மேற்கே 130 கடல் மைல் தொலைவில், இந்தியாவின் பொருளாதார கடல் எல்லைக்குள், அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் ஒன்று  ஒரு வார கால பயிற்சியை மேற்கொண்டுள்ளது.

ஏப்ரல் 7 ஆம் நாள் நடந்த இந்தப் பயிற்சி, இந்தியாவிடம் அனுமதி பெறாமல், நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அமெரிக்கக் கடற்படையின் ஏழாவது கப்பல்படை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இந்தப் பயிற்சியை நடத்துவதற்குத் தமக்கு உரிமையும் சுதந்திரமும் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டத்தின் படியே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும்,  இந்தியாவின் சிறப்புப் பொருளாதார மண்டலம் அல்லது துணைக்கண்டப் பகுதியில் இராணுவப்பயிற்சி அல்லது போர்ப்பயிற்சிக்கான அனுமதி பெறப்பட வேண்டும் என்று சர்வதேச சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் ஏழாவது கப்பல்படையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும், இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சிறப்புப் பொருளாதார மண்டலத்திலும் துணைக்கண்டப் பிராந்தியத்திலும் கடலோர நாட்டின் அனுமதியின்றி, பிற நாடுகள் இராணுவ, ஆயுதப் பயிற்சியை  மேற்கொள்வதற்கு ஐ.நாவின்  கடல்சார் சட்டம்  அதிகாரம் அளிக்கவில்லை என்பதே இந்தியாவின் நிலைப்பாடு” என்று கூறியுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *