முக்கிய செய்திகள்

இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 நாள் பயணமாக அமெரிக்காவின் வோசிங்டன் நகருக்கு சென்றுள்ளார்

367

இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 நாள் பயணமாக அமெரிக்காவின் வோசிங்டன் நகருக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு நடாத்தி, இரண்டு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.

அமெரிக்காவின் முதன்மையான இராணுவ கூட்டாளியாக இந்தியாவை கடந்த 2016ஆம் ஆண்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

அத்துடன் இந்த அமெரிக்க பயணத்தின் போது அண்மையில் காலமான அமெரிக்க
முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடலுக்கு மலர் வளையம் வைத்து இந்தியாவின் சார்பில் அவர் வணக்கம் செலுத்தவுள்ளார் என்றும் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *