முக்கிய செய்திகள்

இந்திய மீனவர்களுக்கு யாழ்.பல்கலை மற்றும் மட்டக்களப்பில் அஞ்சலி

169

நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு மீன்பிடிப் படகு விபத்துக்குள்ளாகியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பபாணப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி பல்கலைக்கழக வளாகத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இன்று புதன்கிழமை முற்பகல் 10.15 மணியளவில் இடம்பெற்றது.

அஞ்சலி நிகழ்வின் இறுதியில் கண்டன அறிக்கை ஒன்றும் மாணவர்களால் வாசிக்கப்பட்டு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர் என்று கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறிலங்காவின் கடல் எல்லையில் உயிரிழந்த நான்கு இந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் உயிரிழந்த இந்திய மீனவர்கள் நான்கு பேருக்கும் மலர் மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *