முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இந்திய விமானப்படையின் மிக் -21 போர் விமானம் விபத்து

295

இந்திய விமானப்படையின் மிக் -21 போர் விமானம் ஒன்று, போர்ப் பயிற்சியின் போது, விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொருங்கியுள்ளது.

இந்தியாவின் மத்திய பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து, பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்ற போதே நேற்றுக்காலை இந்த விபத்து இடம்பெற்றதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில், விமானத்தை ஓட்டிச் சென்ற குரூப் கப்டன் குப்தா என்ற விமானி, உயிரிழந்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் இந்திய விமானப்படை கூறியுள்ளது.

எனினும், எந்த இடத்தில் இந்த விமானம் விபத்துக்குள்ளானது என்ற  தகவலை இந்திய விமானப்படை வெளியிடவில்லை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *