இந்திய விமானப்படையின் 25 விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளன

48

சிறிலங்கா விமானப் படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்திய விமானப்படையின் 25 விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளன.

70 ஆவது ஆண்டு நிறைவு, மார்ச் 2 ஆம் திகதி, விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்ஷன பதிரனவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

அத்துடன், மார்ச் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை காலி முகத்திடலில் விமானக் கண்காட்சி ஒன்று நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்திய விமானப்படை விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளன.அதற்கான, பயிற்சி நடவடிக்கைகள் இன்றும் மேற்கொள்ளப்பட்டன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *