முக்கிய செய்திகள்

இந்திய விமானப்படை விமானி கைது செய்யப்பட்டுள்ளார் என்ற பாகிஸ்தானின் அறிவிப்பை இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

370

இந்திய விமானப்படை விமானி கைது செய்யப்பட்டுள்ளார் என்ற பாகிஸ்தானின் அறிவிப்பை இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.

துரதிஷ்டவசமாக மிக்-21 ரக விமானப்படை விமானமொன்றை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதில் பயணித்த விமானியை காணவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணித்த மூவர் கைது!- பாக். தெரிவிப்பு (2ஆம் இணைப்பு)

பாகிஸ்தானினால் சுட்டுவீழ்த்தப்பட்ட இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்களில் பயணித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

அதில் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் கஃபூர் தெரிவித்துள்ளார்.

மேலும், காஷ்மீர் எல்லையை கடந்து பயணித்தமையினால் தற்பாதுகாப்பு நிமித்தமே குறித்த இந்திய விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதனை நிராகரித்துள்ள இந்தியா, தமது விமானங்களதும், விமானிகளதும் உண்மை நிலை குறித்து தாம் அறிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இரு இந்திய விமானப்படைகள் விபத்திற்குள்ளாகியிருப்பதாவும், அதில் பயணித்த இரு விமானிகளும், பொதுமகன் ஒருவரும் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இந்திய விமானங்களை சுட்டுவீழ்த்தியது பாகிஸ்தான்! – எல்லையில் போர் பதற்றம்

இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரு விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சு உறுதிபடுத்தியுள்ளது.

காஷ்மீரில் முன்னெடுக்கப்பட்ட விமானத் தாக்குதலில் குறித்த இரு விமானங்களும் தமது வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து விமானியொருவர் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், இது ஒரு விபத்து என தெரிவித்துள்ள இந்திய தரப்பு தாக்குதல் இடம்பெற்றதையும், விமானி கைது செய்யப்பட்டதையும் நிராகரித்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பரஸ்பர தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *