முக்கிய செய்திகள்

இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகைக்கு பின்னரே நினைவுத்தூபி உடைப்பு; அரியநேத்திரன்

95

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்குப் பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமையானது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் குடும்ப ஆட்சியைதான் கொண்டு செல்கின்றது.

இவ்வாறு குடும்ப ஆட்சி நடைபெறுகின்றமையினால் பல்வேறுப்பட்ட அச்சுறுதல்கள் மற்றும் தடைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

பல்வேறுப்பட்ட நினைவுத் தினங்களை நடத்த முடியாத சூழ்நிலையே தற்போது காணப்படுகின்றது.

இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், சிறிலங்காவுக்கு வருகைத்தந்து சென்ற மறுதினமே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டுள்ளமையினால், அவர்களின் அதரவு இருக்கின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது.

சிலவேளை இருக்கலாம். இல்லெயென்று கூறமுடியாத சூழ்நிலை இருக்கின்றது. இவ்வாறுதான் முள்ளிவாய்க்கால் நடைபெற்ற இறுதிப் போரில் கூட இந்தியாவின் பங்களிப்பு இலங்கை அரசாங்கத்துக்கு இருந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *