முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இந்தோனேசியாவின் லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்த்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90ஐத் தாண்டியுள்ளது

751

இந்தோனேசியாவின் லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்த்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90ஐத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 91பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர் எனவும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் கட்டடங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதுடன், மீண்டும் வீடுகளுக்கு செல்வதற்கு அச்சப்படும் மக்கள் தங்குவதற்கான தற்காலிகக் இருப்பிடங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தின் ஆழம் மிக தீவிரமாக இல்லை என்றும், பூமியின் மேல் பரப்புக்குக் கீழே சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மட்டுமே இது ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட லோம்போக் தீவில் உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான சுற்றுலா வாசிகள் சென்று திரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த தீவில் கடந்த வாரமும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு 90இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகில் உள்ள பாலி தீவிலும் உணரப்படதனால், அங்கும் மக்கள் கட்டிடங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெளியான இடங்களில் தஞ்மடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *