இந்தோனேஷியாவின் மவுண்ட் சினாபுங் (Mount Sinapung) என்ற எரிமலை குமுறத் தொடங்கியுள்ளதுடன் 5 கிலோமீற்றர் உயரத்திற்கு சூடான சாம்பலை வெளியேற்றி வருகின்றது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்இம்மலை முதலில் சாம்பலை வெளித்தள்ளியிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அவ்விதமாக சாம்பலை வெளித்தள்ளி வருகின்றது.
இதேவேளை, வடக்கு சுமத்ரா மாகாணத்தில் எரிமலை வெடிப்புக்கான எச்சரிக்கை மிக உயர்ந்த மட்டத்தில் விடுக்கப்பட்டுள்ளதோடு இதுவரையில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.