இந்த ஆண்டின் முதலாவது “வெஸ்ட் நைல்”(West Nile) வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக ரொரன்ரோ சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரொரன்ரோவைச் சேர்ந்த ஒருவருக்கு குறித்த இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் முதலாவதாக பதிவாகியுள்ள மனிதருக்கான “வெஸ்ட் நைல்”(West Nile) வைரஸ் தொற்று இது எனவும் அவர்கள் விபரித்துள்ளனர்.
தொற்றுக்குள்ளான அந்த நபர் மருத்துவனையில் அனுமதிகக்ப்பட்டு சிகிச்சைகள் பெற்றுக் கொண்ட பின்னர், தற்போது வீட்டில் தங்கியிருந்து உடல்நலம் தேறி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துளள போதிலும், அவர் ரொரன்ரோவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்ற விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.