முக்கிய செய்திகள்

இந்த ஆண்டின் “Canada Day”யின் போது நாடாளுமன்ற நிகழ்வுகளை தவிர்த்துவிட்டு, மூன்று நகரங்களில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

927

இந்த ஆண்டுக்கான Canada Day கொண்டாட்டங்களின் போது, நாடாளுமன்றில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை பிரதமர் ஜஸ்டின் ரூடோ தவிர்க்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு பதிலாக இந்த ஆண்டு கொண்டாடப்படவுள்ள கனடாவின் 151ஆவது பிறந்த நாள் அன்று வீதிகளில் மக்கள் நடாத்தும் கொண்டாட்டங்களில் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் எதிர்வரும் முதலாம் நாள் ஒன்ராறியோவின் Leamington, Regina மற்றும் Dawson ஆகிய நகரங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பிரதமர் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடாளுமன்றில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் பிரதமர் Leamingtonஇல் இருநது நேரடி காணொளி மூலம் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.

இம்முறை கனடாவின் பிறந்த நாளை பிரதமர் கனேடிய மக்களுடனும் அவர்களது குடும்பங்களுடனும் இணைந்து கொண்டாட விரும்புவதாகவும், குறிப்பாக இதுவரை நாட்டில் பெரும்பாலும் சென்றிராத பகுதி மக்களுடன் அதனைக் கொண்டாடவுள்ளதாகவும், பிரதமரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய வர்த்க வரி அறிவிப்பினால் கனடாவின் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ள நிலையில், பெரும்பாலும் அவ்வாறான பாதிப்பினை எதிநோக்கியுள்ள நகர தொழிலாளர்கள் மற்றும் மக்களுடனேயே பிரதமர் இந்த ஆண்டுக்கான Canada Dayயைக் கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *