முக்கிய செய்திகள்

இனப்படுகொலை இடம்பெற்றதாக தகவல்கள் திரட்டப்பட்ட ஆவணம் ஐ.நா.வுக்கு

106

மியன்மாரில் இடம்பெற்றது போன்று சிறிலங்காவிலும் இனப்படுகொலை இடம்பெற்றதாக தகவல்கள் திரட்டப்பட்ட ஆவணமொன்றை ஐ.நா.வுக்கு அனுப்புவதற்காக அனைத்துத் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரை நோக்கி மூன்று கோரிக்கைகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளை நோக்கி ஒரு கோரிக்கை என்று நான்கு கோரிக்கைகளை மையப்படுத்திய ஆவணமொன்றை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி இறுதி செய்துள்ளது.

இதில் நான் உட்பட கூட்டணியின், பங்காளிக்கட்சிகளான தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் பொதுச்செயலாளர் அனந்தி சசிதரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளோம்.

இந்நிலையில் இந்தக் கோரிக்கை ஆவணம், ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், சில புலம்பெயர் அமைப்புக்கள் ஆகியவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அத்தரப்பினர் இக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு கையொப்பமிடும் இடத்து விரைவில் ஐ.நா.செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்ரஸ், ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலட் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது” என மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *