இன்று உரையாற்றுகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

46

இந்தியாவின் 72 ஆவது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று மாலை உரையாற்றுகிறார்.

குடியரசுத் தலைவரின் உரை மாலை 7 மணி முதல் அகில இந்திய வானொலியின் அனைத்து தேசிய அலைவரிசைகளிலும் ஒலிபரப்பப்படுவதுடன், அனைத்து தூர்தர்ஷன் அலைவரிசைகளிலும், ஒளிபரப்பப்படவுள்ளது.

இந்தியாவின் குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *