முக்கிய செய்திகள்

இன்று காலை மிசிசாகா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

569

இன்று அதிகாலை வேளையில் மிசிசாகா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Dundas Street East மற்றும் Wharton Way பகுதியில், இன்று அதிகாலை 2.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, அங்கே குறித்த அந்த ஆண் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுட்ன பாரதூரமான நிலையில் காணப்பட்டதாகவும், உடனடியாகவே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் பீல் பிராந்திய அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்ட நபர் குறித்த விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகினற்னர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *