முக்கிய செய்திகள்

இன்று வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்!

493

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சர்வதேச தினத்தையொட்டிய நிகழ்வுகள் இன்றைய தினம் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.

இலங்கையில் காணாமல் போனவர்கள் சம்பந்தமான அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான நிகழ்வு இன்றைய தினம் கொழும்பு ஜே.ஆர். ஜயவர்தன மண்டபத்தில் நடைபெறுகின்றது.

இந்நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம அதிதியாகக் கலந்து‪ கொண்டு உரையாற்றுகிறார்.

பலவந்தமான முறையில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சர்வதேச தினம் சர்வதேச அளவில் ஓகஸ்ட் 30ஆம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதேவேளை அம்பாறை மாவட்டம் திருக்கோவிலில் நடைபெறவிருக்கும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து உறவுகளையும் ஒன்றிணையுமாறு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி கடந்த வாரம் அழைப்புவிடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *