முக்கிய செய்திகள்

இன்றையதினம் எழுச்சிப்போராட்டம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

57

தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் நடைபெறும் எழுச்சிப்போராட்டங்களுக்கு சமாந்தரமாக கனடிய மண்ணிலும் இன்றையதினம் எழுச்சிப்போராட்டம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

ஒண்டாரியோ சட்டசபையின் முன்பாக பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது மாலை ஐந்து மணி வரையில் நடைபெற்றிருந்தது.

இதன்போது தயாகத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும் என்றும், இனப்படுகொலை சிறிலங்கா அரசாங்கத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை நாளைதினம் Yonge-Dundas உள்ள டண்டாஸ் சதுக்கத்தில் போராட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *