இன அழிப்பை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது

297

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான மேலதிக காலஅவகாசத்தை கோரும் பேச்சுவார்த்தைகளை ஶ்ரீலங்கா அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
ஶ்ரீலங்கா வெளிவிவகார வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன.

பிரிட்டன் கனடா ஜேர்மனி மசெடோனியா மொன்டினீக்ரோ ஆகிய நாடுகளுடனேயே ஶ்ரீலங்கா அரசாங்கம் மேலதிக காலஅவகாசத்தை கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது

பெப்ரவரி 25 ம் திகதி ஜெனீவா அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே அரசாங்கம் இந்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானமொன்று கொண்டுவரப்படவுள்ளதை இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் ஜோர்ன் ரொஹ்டே உறுதி செய்துள்ளாரஶ்ரீலங்காவில் நல்லிணக்கம் பொறுப்புக் கூறுதல் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் தீர்மானமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதை தன்னால் உறுதி செய்யமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தீர்மானத்தில் நகல்வடிவம் விரைவில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *