முக்கிய செய்திகள்

இரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்யும் முடிவை உடனடியாக மீளப்பெற வேண்டும்

42

இரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்யும் முடிவை உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்றினால் மரணமடைந்த முஸ்லிம் மக்களின் ஜனசாக்களை அடக்கம் செய்வது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் மேலும் குழப்பமான, இன, மத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் நடவடிக்கைகளையே எடுத்து வருகிறது என்று கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் ஏன் இந்தத் தவறான முடிவை எடுத்தது என்றும், இரணைதீவில் ஜனசாக்களை அடக்கம் செய்வதற்கு யாருடைய பரிந்துரை பெறப்பட்டது என்றும் மாவை சேனாதிராஸா கேள்வி எழுப்பியுள்ளார்.

இரணைதீவுக்குப் பதிலாக இஸ்லாமிய மதத் தலைவர்களுடன் கலந்தாலோசித்துப் பொருத்தமான இடங்களில் ஜனசாக்களை இஸ்லாமிய மத ஆராதனையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *