முக்கிய செய்திகள்

இரணைதீவு மக்கள் இன்று போராட்டத்தில்

41

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கிளிநொச்சி இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவு மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரணைமாதா நகர் இறங்குதுறையில் இன்று காலை 9 மணியளவில் இந்தப் போராட்டம் ஆரம்பமாகியது.

இரணைதீவு மக்களும் கிராமமட்ட அமைப்புக்கள் மற்றும் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரும் இணைந்து இந்தப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் இரணைதீவு மக்களுடன், கிளிநொச்சி மாவட்ட, கோட்ட முதல்வர், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மெசிடோ நிறுவனத்தினர், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர், இரணைமாதா நகர் பகுதியில் இருந்து படகு மூலம் பொதுமக்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் இரணைதீவுக்குப் செல்ல முயன்ற போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அங்கு மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது.

தொடர்ந்து போராட்டக் குழுவினர், பூநகரிப் பிரதேச செயலாளர், யாழ். மறைமாவட்ட ஆயர், யாழ். மனித உரிமை ஆணைகுழுவுக்கு மனுக்களைக் கையளித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *