முக்கிய செய்திகள்

இரணைமடு வாய்க்காலை ஆழப்படுத்தும் நடவடிக்கையில் விவசாயிகள்

829

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்தமையால் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தம் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இரணைமடு குளத்தின் கீழ் 800 ஏக்கர் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையால் பயிர்செய்கை நிலங்களிற்கு நீர் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இரணைமடு திட்ட விவசாயிகள் இணைந்து குளத்தின் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தி நீரை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக உழவு இயந்திரஙகள், மனித வலு ஆகியன பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்விடயம் தொடர்பில் இரணைமடு விவசாய சம்மேளன செயலாளர் மு.சிவமோகன் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில், நீர் பற்றாக்குறை காரணமாக குளத்தின் வாய்க்கால் பகுதி ஆழப்படுத்தப்பட்டு வருவதாகவும், விவசாயிகள், நீர்பாசன திணைக்களம் ஆகியன இதற்கு ஒத்துழைப்பு வழ்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிதத் பணிக்காக அரச நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை எனவும், முழுமையாக விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர், அரச திணைக்களங்களிடம் கேட்பதற்கு முன்னர் செய்கையை பாதுகாப்பதற்கு தாம் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் குறித்த பணிக்கு எவ்வளவு செலவு ஏற்படும் என்ற கணிப்பும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *