இரண்டாவது “எழுக தமிழ் பேரணி” எதிர்வரும் சனவரி மாதம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது!

1093

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்யும் இரண்டாவது “எழுக தமிழ் பேரணி” எதிர்வரும் சனவரி மாதம் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களுள் ஒருவரான வைத்திய கலாநிதி லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவை நேற்று மாலை இலங்கை மன்றக்கல்லூரியில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

செயற்கையாக கட்டமைக்கப்பட்ட சூழ்நிலைகளாலும் நிர்பந்தங்களாலும் அழுத்தங்களாலும் எமது மக்களின் நீதிக்கான பயணம் மழுங்கடிக்கப்படலாம் என்ற ஐயப்பாடு, தமிழ் மக்கள் மத்தியில் அண்மைக்காலமாக நிலவி வந்ததையம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அதனைத்தடுக்கும் வகையில் விழிப்புணர்வு செயற்பாடொன்றின் அவசியம் உணரப்பட்டதாகவும், அதனால்தான் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் நாள் யாழ். நகரில் “எழுக தமிழ் பேரணி நடத்தப்பட்டது என்பதையும் அவர் விபரித்துள்ளார்.

எனவே மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்தும் வெளிக்கொண்டுவந்து அதற்கு தீர்வு காணும் நோக்கில் இரண்டாவது “எழுக தமிழ் பேரணியை ” எதிர்வரும் சனவரி மாதம் மட்டக்களப்பில் நடாத்துவதற்கு எதிர்பார்த்துதள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *