இரண்டு கனேடியர்களுக்கும் எதிரான வழக்கு நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது

46

சீனாவில் உளவு பார்த்தனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கும் எதிரான வழக்கு நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ (Marc Garneau) தெரிவித்துள்ளார்.

இரண்டு கனடியர்களுக்கும் எதிரான வழக்கு வரும் 19ஆம் நாளில் இருந்து 22ஆம் நாள் வரை விசாரிக்கப்படவுள்ளதாக, பீஜிங்கில் உள்ள கனடிய தூதரகம் தகவல் அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஒட்டாவா தொடர்ந்து, தூதரக அணுகலைத் தேடி வருவதாகவும், அவர்கள் விடுவிப்பது அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விவகாரமாக உள்ளது என்றும் கனடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் முன்னாள் இராஜதந்திரி Michael Kovrig மற்றும் வர்த்தகர் Michael Spavor ஆகியோர், சீனாவில் உளவு பார்த்தனர் என்ற குற்றச்சாட்டில், 800 நாட்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *