முக்கிய செய்திகள்

இரண்டு வழக்குகளில் இருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ விடுதலை

25

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான இரண்டு வழக்குகளில் இருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கூட்டுறவு மற்றும் வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் 153 பேரை அரசியல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளதாகவும், அதனூடாக அரசாங்கத்திற்கு 400 இலட்சம் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவுக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பாக ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவினால் நீதிமன்றத்தில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கானது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சட்டத்திற்கு முரணானது எனவும், இதனால் வழக்கில் இருந்து ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவை விடுதலை செய்வதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *