முக்கிய செய்திகள்

இராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்

17

ஜெர்மனியின் சர்வாதிகார ஆட்சியாளர் ‘அடொல்ப் ஹிட்லர் எந்தவொரு அரசியல்வாதிக்கும் முன்மாதிரியானவர் அல்ல’ என்று சிறிலங்காவுக்கான ஜெர்மனி தூதுவர் ஹொல்கர் செயுபேர்ட் (Holger Seubert) தெரிவித்துள்ளார்.

கீச்சக செய்தியொன்றை வெளியிட்ட, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஹிட்லராக மாறுவார்’ என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார்.

“ஹிட்லர் ஒருவர் இருந்தால் சிறிலங்காவும் பயனடைய முடியும் என்ற விதத்திலான கருத்துக்கள் எனக்கு கேட்கின்றது.

கற்பனைகளுக்கு அப்பால் மில்லியன் கணக்கான மரணங்களுக்கும் மக்களின் துன்பங்களுக்கும் பொறுப்பானவரே, அடொல்ப் ஹிட்லர் என்பதை நான் நினைவுகூர்கின்றேன்.

நிச்சயமாக அவர் எந்தவொரு அரசியல்வாதிக்கும் முன்மாதிரியானவர் அல்ல”

என்று சிறிலங்காவுக்கான ஜெர்மனி தூதுவர் ஹொல்கர் செயுபேர்ட் (Holger Seubert) தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *