முக்கிய செய்திகள்

இராணுவத் தளத்தை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்கள்

45

மேற்கு ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினரின் இராணுவத் தளத்தை குறிவைத்து, ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

அல்-அசாத் (Al-Asad) வானுர்தி தளத்தின் மீது ஈராக் நேரப்படி இன்று காலை 7:20 மணிக்கு 10 ஏவுகணைகள் ஏவப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பென்டகன் அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத போதும், அந்த தளத்தில் தங்கியிருந்த அமெரிக்க ஒப்பந்தகாரர் ஒருவர் அதிர்ச்சியினால் மரணமாகியுள்ளார் என்று, பென்டகன் பேச்சாளர் ஜோன் கிரிபி (ohn Kirby) தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் பெரியவில் இழப்புகளை ஏற்படுத்தவில்லை என்றும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏவுதளத்தை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்ததாகவும், ஈராக் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பாப்பரசர் பிரான்சிஸ் வரும் வெள்ளிக்கிழமை ஈராக்கிற்கு பயணமாகவுள்ள நிலையில், இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *