முக்கிய செய்திகள்

இராணுவ ஆயுத ட்ரோன்களை இந்தியா கொள்வனவு

45

அமெரிக்காவிடம் இருந்து சுமார் 22 ஆயிரம் கோடி ரூபா செலவில் 30 இராணுவ ஆயுத ட்ரோன்களை கொள்வனவு செய்ய இந்தியா தீர்மானித்துள்ளது.

சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவில் பதற்றமான சூழல் நீடிக்கும் நிலையில் இந்திய வான்வழி பாதுகாப்பை வலுப்படுத்த இந்த கொள்முதல் உதவிகரமாக இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சாண்டியாகோவில் உள்ள ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து எம்கியூ 9-பி பிரிடேட்டர் (MQ-9B Predator drones) என்ற ட்ரோன்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

இந்த ட்ரோன்கள் தொடர்ந்து 48 மணி நேரம் பறக்கக்கூடியவை. 1700 கிலோ எடை வரையிலான ஆயுதங்களை அவற்றால் சுமந்து செல்ல முடியும்.

தென்சீன கடலில் சீன போர் கப்பல்களின் நடமாட்டத்தையும், இமாலய பகுதிகளில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறுவதை தடுக்கவும் இந்த ட்ரோன்கள் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *