முக்கிய செய்திகள்

இரு கனடியர்களுடன் அவர்களது குடும்பங்களுக்கு தொடர்பு

54

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மைக்கல் கோவ்ரிக் (Michael Kovrig) மற்றும் மைக்கல் ஸ்பேவர் (Michael Spavor) ஆகிய இரு கனடியர்களுடன் அவர்களது குடும்பங்களுக்கு தொடர்புகளை அதிகளவில் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு  முன்னேற்றகரமான நிலைமைகள் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

சீன அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவரும் உளவு பார்த்த குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரையும் விடுப்பதற்கான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்திருந்தது.

எனினும், அந்த முயற்சிகள் முழுமையாக வெற்றியடைந்திருக்காத நிலையில் தற்போது, குடும்ப அங்கத்தவர்களை அவர்களுடன் தொடர்பு படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *