முக்கிய செய்திகள்

இரு தடுப்பூசிகள் குறித்து விசாரிக்கவுள்ள கனடிய சுகாதார ஒழுங்குபடுத்தல் துறை

241

இரண்டு கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக கனடிய சுகாதார ஒழுங்குபடுத்தல் பிரிவு விரிவுபடுத்தப்பட்ட விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

பைசர் மற்றும் Xeljanz ஆகிய இரு கொரோனா தடுப்பூசி பற்றியே இவ்வாறான விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த தடுப்பூசிகள் எவ்விதமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்று ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அண்மைய நாட்களில் புற்றுநோய், வாதம், குழல் அழற்சி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதனை வழங்குவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றிய சில அவதானிப்புக்கள் பெறப்பட்ட நிலையிலேயே இவ்வாறான மீள் விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இந்த இரு தடுப்பூசிகளின் செயற்பாட்டு ஆய்வுப் பரிசோதனைகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *