முக்கிய செய்திகள்

இரு நிமிட மௌன அஞ்சலிக்கு கோரிக்கை

21

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரணடு வருடங்கள் நிறைவடையும் நிலையில் அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது

அதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 8.45 மணி முதல் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் புதன்கிழமை நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *