முக்கிய செய்திகள்

இறுதிப் போரில் இனப்படுகொலை மேற் கொள்ளவில்லை எனில் ஏன் மகிந்த மற்றும் அரசு சர்வதேச விசாரணைக்கு அஞ்சவேண்டும்

318

இறுதிப் போரில் இனப்படுகொலை மேற் கொள்ளவில்லை எனில் ஏன் மகிந்த மற்றும் அரசு சர்வதேச விசாரணைக்கு அஞ்சவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொது செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார் இறுதிப் போரில் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மற்றும் ஊடகவியிலாளர் இசைப்பிரியா ஆகியோர் உட்பட பொது மக்களை படையினர் கொன்றமைக்கான ஆதரங்கள் இல்லை என்றும் போலிக் காணொலிகளை வைத்து குற்றம் சுமத்த வேண்டாமென முன்னாள் ஐனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஐபக்ச அண்மையில் இந்தியாவில் தெரிவித்திருகின்றார். அவ்வாறாயின் அவை தொடர்பான சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் ஏன் அஞ்ச வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். மகிந்த ராஐபக்சவே தமது படைகள் கொலை செய்யவில்லை என்று வெளியாகியுள்ள காணொலிகள் போலியானவனை என்று கூறுகின்ற போது இவை தொடர்பில் ஏன் விசாரணைகளுக்கு அஞ்சுகின்றீர்கள். நீங்கள் செய்தவை என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை செய்வதற்கு நீங்கள் தயாரா என்று நாம் அவரிடமும் அவரது சகோரதர்களிடம. மற்றும் அரசாங்கம் படைத்தரப்புக்களிடம்; கேட்கின்றோம் என்றார். நாட்டுப் பற்றாளர் சத்தியமூர்த்தி மற்றும் ஈகைப் போராளி முருகதாசன் ஆகியேரின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழிலுள்ள தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதன் போது உரையாற்றுகையிலையே கஜேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது.. மகிந்த ராஐபக்ச தலைமையிலான அரசாங்கம் எங்கள் மீது கொடுரமான போர் ஒன்றை கட்டவிழ்த்து விட்டிருந்தது. களத்திலே புலிகளை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் இனப்படுகொலையொன்றைச் செய்தாவது புலிகளை அழிக்க வேண்டுமென திட்டம் தீட்டி பல வெளிநாடுகளின் ஆதரவுடன் அந்தப் போரை மகிந்த தலைமையிலான அரசாங்கம் தொடுத்தது. இதில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்பப்பட்டும் பல ஆயிரக்கணக்கான மக்கள் சித்திரவதையும் செய்யப்பட்டிருந்தனர். சிறிலங்கா படைகளின் இக் காடுரமான தாக்குதல்களிலேயே மக்களுக்காகச் செயற்பட்ட ஊடகவியியலாளர் சத்திமுர்த்தியும் இறந்திருந்தார். அதே போன்று ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் சர்வதேசம் வேடிக்கை பார்க்காது உடனடியாக போரை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியும் முருகதாசன் தனதுயிரை ஈகம் செய்திருந்தார். அதே போன்று வெளிநாடகளில் பலவற்றிலும் தாயகத்தில் கொல்லப்படும் மக்களைக் காப்பாற்ற வேண்டுமென போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனாலும் போரை நிறுத்தாமல் தொடர்ந்தும் அரசாங்கம் முழுவீச்சில் போரைத் தொடுத்து தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை அரங்கேற்றியது. இதில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள் காணாமலாக்கப்படுதல், சித்திரவதைள் என பல கொடுரங்கள என சிறிலங்கா படைகள் தமிழ் மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது. இப் படுகொலைகள் உட்பட சிறிலங்காப் படைகளாலும் அரசினாலும் இழைக்கப்பட்ட அநீதிகள் குற்றங்களுக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டுமென தமிழர் தரப்புக்கள் கோரி வருகின்றன. இவ்வாறு கடந்த பத்து வருடங்களாக கோரி வருகின்ற போதும் இது வரையில் நீதி கிடைக்கவில்லை.. ஆனாலும் நீதிக்கான எமது போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. அதே நேரம் எமக்கு நீதியை வழங்குவதற்கு அரசாங்கங்கள் தயராக இல்லை. அவர்களை தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் செயற்பாடுகளையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். அதற்கு எம்மவர்களும் முண்டு கொடுத்து அவர்களைக் காப்பாற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையெல்லாம் மக்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. ஏம்மைப் பொறுது;தவரையில் படுகொலையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளக் கூடாது. இழைக்கப்பட்ட கொடுரங்கள் அநீதிகளுக்கு நீதி வேண்டும் என்றே கோருகின்றோம். இதிலிருந்து சிறிங்கா அரசாங்கமோ அல்லது அதன் படைகளோ தப்பித்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு அவர்கள் தப்பித்துக் கொண்டால் இந்தச் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்க முயல்வார்கள். ஆகையினால் நீதி கிடைக்க வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இவ்வாறு; தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும் என நாம் கோருகின்ற போது அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற வகையில் சில தமிழ்த் தரப்புக்களே செயற்படுகின்றனர். குறிப்பாக இந்த அரசில் நம்பிக்கையுள்ளது. அரசைக் கவிழ்க்கக் கூடாது என்று கூறி அரசிற்கு முண்டு கொடுத்துக் கொண்டு அரசையும் அதன் படைகளையும் பாதுகாக்கின்ற வகையிலையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். அவ்வாறு அரசையும் அதன் படைகளையும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாதுகாத்துக் கொண்டு தமிழ் மக்களிடம் வந்து முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். உள்ளுரிலும் வெளிநாட்டிலும் அரசைப் பாதுகாக்கின்றவர்கள் இங்கு மக்களிடம் வந்தால் அதற்கு மாறாக நடிக்கின்றனர். இவ்வாறானவர்களே தமிழ் மக்களுக்கு நீதி நியாயம் கிடைப்பதற்கு தடையாகவும் இருக்கின்றனர். மேலும் நாங்கள் செய்யும் இவ்வாறான நினைவேந்தல்கள் என்பது எங்களை தியாகிகள் காட்டி கொள்ளும் வேடமிட்ட நிகழ்வாக இருக்காது. எமது மக்களுக்கு எதிராக அரசும் அதன் படைகளும் இழைத்த அநீதிகளை எடுத்துக் காட்டி நீதியைக் கோருவதாகவே அமையும் என்றார். இதேவேளை தமிழ் மக்கள் தமக்கான நீதியை கடந்த பல வருடங்களாக கோரி நிற்கின்ற இந்த நிலையிலும் முள்ளிவாய்க்கால் பத்தாவது ஆண்டில் அரசிற்கு எதிராக தமிழ் மக்கள் திரண்டு நீதியைக் கோரவுள்ள நிலையிலும் ஒரு மாநாட்டை நடாத்தி அதில் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாக கூற வேண்டிய தேவை ஈபீஆர்எல்எப் அமைப்பின் சுரேஸ்பிரேமச் சந்திரன் தரப்பிற்கு இப்போது ஏன் ஏற்பட்டது. நீதிக்காக் தமிழ் மக்கள் அணி திரள்வைத் தடுத்து அரசைப் பாதுகாக்கும் வகையிலையே ஈபிஆர்எல்எப் அமைப்பின் செயற்பாடுகளும் அமைந்துள்ளது. மேலும் முள்ளிவாய்கால் படுகொலையின் பத்தாவது ஆண்டு வரவிருக்கிறது. இந்த படுகொலைகளுக்கு தமிழ் மக்கள் நீதியைக் கோரி நிற்கையில் அந்த நீதியை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முயலாமல் அரசையும் அதன் படைகளையும் பாதுகாக்கும் வகையில் செயற்படுகின்றவர்களை மக்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். நாம் மேற் கூறியது போன்று இவற்றையெல்லாம் செய்து விட்டு முதலைக்கண்ணீர் வடிப்பதற்குமு; பலர் இருக்கின்றனர். ஆகவே பல்கலைக்கழக சமூகம் பொது அமைப்புக்கள் என பல தரப்புக்களையும் இணைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஒரு செயற்குழுவை உருவாக்க வேண்டும். அதனூடாக முள்ளிவாய்ய்கால் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தப் பணிகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமானது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாவது அண்டில் பல ஆயிரக்கணக்கான மக்கள் அணி திரண்டு நீதியைக் கோர வேண்டும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றார்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *