முக்கிய செய்திகள்

இலக்கை அடையும் வரை எமது போராட்டம் தொடரும்

123

இலக்கை அடையும் வரை எமது போராட்டம் தொடரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடைபெறும் நீதிக்கான போராட்டம் நேற்றிரவு திருகோணமலை நகரை சென்றடைந்த போது, அதில் கலந்து கொண்டு இரா.சம்பந்தன் உரையாற்றியுள்ளார்.

இதன்போது அவர், ” இராணுவ மயமாக்கல், பௌத்த மயமாக்கல் தலைவிரித்தாடுகிறது. நாட்டில் இன்று ஜனநாயக ஆட்சி இல்லை. இராணுவ ஆட்சியை நோக்கியே நாடு செல்கின்றது. இதற்கு உடன் முடிவு கட்டப்பட வேண்டும்.

தமிழ்பேசும் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். இதை நாட்டின் தலைவர்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

இந்தப் போராட்டம் முடிவு அல்ல. இது ஆரம்பப் போராட்டமே. எமது இலக்கை அடையும் வரை எமது போராட்டம் தொடரும்” என்றும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *