முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இலங்கைக்கான கனேடிய தூதுவர் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் சிறப்பு சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்

670

யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள கனடாவின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் மைக்கின்னன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் சிறப்பு சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.

கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு, இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

வடமாகாணத்தின் தற்போதைய நிலமைகள், மக்களின் தேவைகள் உள்ளிட்டவை குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை மன்னாருக்கு பயணம் மேற்கொணடிருந்த இலங்கைக்கான கனேடிய தூதுவர், மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு அலுவலகத்தில் அதன் தலைவர் அருட்பணி ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் ஆளுநர் சபை பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியுள்ளார்.

இதன்போது அவர், இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் விடயத்தில் கனேடிய அரசாங்கமானது பெரும் ஆதரவை வழங்கி வருகின்றது எனவும், இதனால் வடக்கு, கிழக்குப் பகுதிக்குச் சென்று மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் முகமாகவே தான் இந்தப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயமாக திறக்கப்பட்டுள்ள அலுவலகம் சம்பந்தமாக உரையாடல் இடம்பெற்ற போது, இந்த அலுவலகம் இலங்கை அரசுக்கு சாதகமாகத்தான் செயல்படும் போல் தங்களுக்கு சந்தேகம் ஏற்படுவதாக பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த கனேடிய தூதுவர், இந்த அலுவலகத்தை முன்னெடுத்துச் செல்லும்சாலிய பீரீஸ் மிகவும் நல்லவர் எனவும், சிறிது காலத்துக்கு அவர்களுக்கு சந்தர்ப்பத்தை அவர்களுக்கு கொடுத்துப் பார்க்குமாறும், இப்பொழுது அவர்களின் செயல்பாட்டை உடனடியாக கணிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

காணாமல் போனவர்களைப் பற்றி தெரிவிக்கப்படுகின்ற இதேவேளை, காணாமல் ஆக்கியவர்களில் இலங்கை அரசு கவனம் செலுத்துவதாக தெரியவில்லை என்று பிரஜைகள் குழுவினரால் தெரிவிக்கப்பட்டதற்கு கருத்து தெரிவித்த கனேடிய தூதுவர், காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கியவர்களையும் கொண்ட திட்டங்களை கொண்டே பல நிபுணர்களை உள்வாங்கி செயற்பாடுக்ள முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு கனேடிய அரசாங்கம் ஆதரவு வழங்கி வருவதுடன் ஊக்கத்தையும் வழங்குகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *