முக்கிய செய்திகள்

இலங்கைக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள பொறியை கழற்ற வேண்டும் என்று சோசலிச மக்கள் முன்னணி தெரிவித்துள்ளார்

516

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளதால், பேரவையில் இலங்கைக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள பொறியை கழற்ற வேண்டும் என்று சோசலிச மக்கள் முன்னணி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து விலகிய அமெரிக்கா கடந்த காலத்தில் இலங்கைக்கு எதிராக முறைப்பாடுகளை செய்தது எனவும், இஸ்ரேலின் பயங்கரவாத ஆட்சியை ஆதரித்து கொண்டு, அமெரிக்க இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி இரண்டு விதமான கொள்கையை கையாண்ட அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து விலகியுள்ளது எனவும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அமைச்சர் மங்கள சமரவீரவும் அமெரிக்காவுடம் இணைந்து வைத்த பொறியை கழற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீர வைத்த பொறியில் இருந்து நாட்டை காப்பாற்றுவதா இல்லையா என்பதை தற்போதைய அரசாங்கமும் நாடாளுமன்றமும் தீர்மானிக்க வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *