முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

1248

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக தெரிவாகியுள்ள அன்ரொனியோ குற்றரெஸின்(António Guterres) பதவிக்காலம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பாகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையிலேயே நல்லிணக்கம் மற்றும் சமாதானம் நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு முழுமையான ஆதரவளிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி உனா மக்கோலி(Una McCauley) தெரிவித்துள்ளார்.

இந்த புத்தாண்டிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர், நீடித்து நிலைக்கக்கூடிய சமாதானத்தை நிலைநாட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தனக்குச் சாதகமான மற்றொரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கான ஆதரவை இலங்கை அரசாங்கம் திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடரானது பெப்ரவரி 27 தொடக்கம் மார்ச் 24 வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளதுடன், இலங்கை தொடர்பான கலந்துரையாடலானது மார்ச் 22ஆம் நாள் இடம்பெறவுள்ள நிலையில், இதில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகத் தீர்மானம் இயற்றப்பட்டால் அதன் மூலம் நல்லிணக்கச் செயற்பாட்டை மேற்கொள்வதற்குத் தேவைப்படும் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலஅவகாசம் மேலும் வழங்கப்பட வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இலங்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து இலங்கை அரசாங்கமானது மெதுவாகவே செயற்பட்டு வருகின்றது என்ற போதிலும், வினைத்திறன் மிக்க பொறுப்புக்கூறல் பொறிமுறையை நடைமுறைப்புடத்துவதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் போர்க் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கும் செயற்பாடானது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்கின்ற குற்றச்சாட்டு இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்குச் சாதகமானதொரு தீர்மானம் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுவதற்குத் தேவையான ஆதரவை இலங்கை அரசாங்கம் திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத் தொடரில் இலங்கை மீதான தீர்மானமானது எவ்வித வாக்கெடுப்புமின்றி நிறைவேற்றப்பட்ட வேளையில், ஜெனீவாவில் அங்கம் வகித்த அமெரிக்கக் குழுவால் பேரவையில் தீர்மானம் முன்வைக்கப்பட்ட போதிலும், அடுத்த ஆண்டு டொனால்ட் ட்ரம்ப்பின் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவே மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அங்கம் வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ட்ரம்ப் அரசாங்கத்துடன் பணியாற்றுவதற்கான தனது கதவுகளை இலங்கை ஏற்கனவே திறந்துவிட்டுள்ளதுடன், அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைக் பென்ஸ் தொலைபேசி மூலமாக மைத்திரிபால சிறிசேனவுடன் தொடர்பு கொண்டு அமெரிக்கா-இலங்கையின் எதிர்கால உறவு தொடர்பாகக் கலந்துரையாடியிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே இலங்கைக்குச் சாதகமான மற்றொரு ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்படக்கூடும் என்ற சந்தேகங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *