இலங்கையின் சுதந்திர தினத்தை துக்கதினமாக கடைபிடிக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது

304

 

இலங்கையின் சுதந்திர தினத்தை துக்கதினமாக அனுஸ்டிக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது.பல்கலைக்கழகத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இக்கோரிக்கையை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் விடுத்துள்ளார்.
விடுதலை வரலாற்றில் யாழ். பல்கலைக்கழகம் ஒரு மாபெரும் சக்தியே.யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த காலங்களில் ஆற்றிய பங்களிப்பு என்பது மிகச்சிறப்பானதும் முனைப்பு மிக்கதுமாகும். தொடரும்  இவ்உந்து சக்தியானது மிகப்பலமானதாகும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஜெனிவாவை வலியுறுத்தி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் நடத்திய மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்

பின்னர் கேப்பாப்பிலவில் நில மீட்புக்காக போராடும் மக்களைச் சந்தித்து கலந்துரையாடிய பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் நாட்களில் கேப்பாப்பிலவு மக்கள் நடத்தவுள்ள ‘காணிக்கு போக சுதந்திரமில்லை‘  போராட்டத்துக்கும் தமது ஆதரவை வழங்கத்தீர்மானித்துள்ளனர்.
அவ்வகையில் இலங்கை சுதந்திரதினத்தை துக்கதினமாக அனுஸ்டிக்க முடிவு செய்துள்ளனர்.
அன்றைய தினத்தன்று தமிழ் மக்களை காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டம் மற்றும்  கேப்பாபுலவு காணி விடுவிப்பு போராட்டத்தில் குதித்துள்ள மக்களிற்கு ஆதரவளித்து ஒன்று திரள மாணவர் அமைப்பு கோரியுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *