இலங்கையின் தற்போதய அரசாங்கம் நாட்டை இராணுவ மயமாக்குகிறது என்று மகிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்

606

இலங்கையின் தற்போதய நல்லாட்சி அரசங்கம், நாட்டை இராணுவ மயமாக்குவதாக முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கை நடைமுறைபடுத்தில் நல்லாட்சி அரசாங்கம் தோல்விக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச, காவல்துறையினருக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்களை இராணுவத்தினருக்கு தற்போதைய அரசாங்கம் கையளித்திருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கண்டறிதல் மற்றும் மனித கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றை இராணுவத்தினர் செய்துவருவது ஆச்சரியமளிக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *