இலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்

706

இலங்கை அரசு முகம் கொடுத்துள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டுமானால் தேசிய அரசு மீது மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்புக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் இன்று நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர், அங்கு கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

ஊழல்களை இல்லாதொழித்து நீதியான ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவே மக்கள் தேசிய அரசுக்கு தங்கள் வாக்குகளை வழங்கியிருந்த போதிலும், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் அரசு இன்று தோல்வியடைந்துள்ளது என்று அவர் சாடியுள்ளார்.

எவன்காட் பிரச்சினையில் இருந்து மத்திய வங்கி பிணைமுறி மோசடி வரையில் மக்களின் எதிர்ப்பார்ப்புக்கு பாதகமாகவே அமைந்திருந்தன எனவும், அரசு முகம் கொடுத்துள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டுமானால் மக்கள் தேசிய அரசு மீது கொண்டுள்ள எதிர்பார்ப்புக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *