இலங்கையின் புதிய அரசியல் அமைப்பை ஆதரிக்கப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

959

இலங்கையில் அவசர அவசரமாக கொண்டு வரப்படும் புதிய அரசியலமைப்புக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளிக்க மாட்டாது என அந்த கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு குறுக்கு வழிகள் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக புதிய அரசியலமைப்பு ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்துலகத்தை திருப்தி படுத்தும் நோக்கில் அவசரமாக புதிய அரசியலமைப்பு உருவாக்க அரசாங்கத்திற்கு இடமளிக்கப்பட முடியாது என்றும் கூறிய அவர், தேசிய ஒற்றுமையை உருவாக்கக்கூடிய, மக்களின் உரிமைகளை உறுதி செய்யக்கூடிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *