இலங்கையில் இனவாத உணர்வுகள் தீவிரமடைவதாக மனித உரிமை அமைப்புக்கள் கவலை!

994

இலங்கையில் மீண்டும் இனவாத உணர்வுகள் தீவிரமடைய தொடங்கியுள்ளமை தொடர்பில் அனைத்துலக மனித உரிமை அமைப்பு க்கள் கவலை வெளியிட்டுள்ளன.

குறிப்பாக சிங்கள தீவிரவாதப் போக்குகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவை கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைய நாட்களில் தாங்கள் அவதானிக்க கூடியதாகவுள்ள ஆபத்தான உரைகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்குள்ளது என்று அனைத்துலக மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் தெரிவித்து்ளளார்.

ஜெனீவா தீர்மானம் மூலம் இலங்கை அரசாங்கம் தன்னை நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு அர்ப்பணித்துள்ள நிலையில், நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் போன்றவற்றுக்காக தன்னை அர்ப்பணித்த நாட்டில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

உலகின் பல பகுதிகளில் பகைமை பேச்சு மற்றும் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், அனைத்து மக்களும் மனித உரிமைகளை அனுபவிப்பதற்கு உள்ள உரிமை குறித்த தங்கள் அர்ப்பணிப்பை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *