முக்கிய செய்திகள்

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான வெளிநாடு செல்ல முற்றபட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்

397

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு ஒன்றுக்கு செல்ல முயற்சித்த 21 பேர், கொழும்பு கடற்பரப்பில் வைத்து கைதாகியுள்ளனர்.

மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் படகு ஒன்றின் மூலம் அவர்கள் பயணித்த போது, கொழும்பில் இருந்து 117 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.

கைதானவர்கள் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவம், அவர்களில் 19 ஆண்களும், 3 பெண்களும் அடங்குவதாகவும், கைதான அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு துறைமுகை காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பெல்ஜியத்துக்கு செல்ல முயன்ற இலங்கை பிரஜையொருவர், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு-குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை கைதுசெய்யப்பட்ட அந்த நபர், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு கடந்த 2ஆம் நாள் புறப்பட்டுச் சென்றுள்ளார் என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நேற்று அதிகாலை நாடு திரும்பிய அவர், பெல்ஜியம் நோக்கி பயணிப்பதற்கான கடவுச்சீட்டை கையளித்துள்ள நிலையில், அதனை சோதனைக்கு உட்படுத்தியபோது, அந்த கடவுச்சீட்டு மலேசியா கடவுச்சீட்டென்றும், அது போலியானது எனவும், குடிவரவு-குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அதனையடுத்தே அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில், தான் பயணித்த விமானத்தில் வைத்தே குறித்த கடவுச்சீட்டை தன்னிடம் வழங்கப்பட்டது என்றும், அதனைப் பயன்படுத்தியே பெல்ஜியத்துக்கு பயணக்கவிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்றும் விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *