முக்கிய செய்திகள்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 17 பேரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

631

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 17 பேரை விடுதலை செய்யுமாறு ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்லை தாண்டி சென்றதாக கைது செய்து தடுத்து வைத்திருந்த இவர்களின் வழக்கு இன்று விசாரணை செய்யப்பட்ட போது நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இலங்கை அரசு தரப்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே இவர்கள் விடுதலை செய்யப்படுவதாகவும், வருகின்ற 6ஆம் நாள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவர்களை விடுதலை செய்வதற்கு இலங்கை அரசு பரிந்துரைத்ததாகவும் தெரிவிக்கபடுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *