முக்கிய செய்திகள்

இலங்கையில் தனி ஆட்சி அமைக்க தாயாராகும் ஐக்கிய தேசியக் கட்சி, ஆதரவு வழங்க கூட்டமைப்பிடமும் கோரிக்கை விடுத்துள்ளது

880

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களை இணைத்து ஐக்கிய தேசிய கட்சி தனித்து அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக மூத்த அமைச்சர் ஒருவர் தலைமையில் எதிரணியினருடன் இரகசிய பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் சிலருடனும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கு அவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களின் உதவியுடன் ஐக்கிய தேசிய கட்சி தனித்து அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாகவும், இதற்கு வெளியிலிருந்தேனும் ஆரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு ஐக்கிய தேசிக் கட்சியினால் தனித்து ஆட்சி அமைக்கப்படும் பட்சத்தில், தற்போதுள்ள தேசிய அரசாங்கம் என்பது இல்லாது போகுமெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *