முக்கிய செய்திகள்

இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனி ஈழம் உருவாவதை ஆதரித்த தலைவர்களில் ஒருவர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் தமது 88 வயதில் காலமானார்.

432

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தொழிற்சங்கத் தலைவருமான ஜார்ஜ் பெர்ணான்டஸ் தமது 88 வயதில் காலமானார்.

சோஷியலிஸ்ட் மரபில் வந்த பெர்ணான்டஸ், 1974ல் நடந்த ரயில்வே தொழிற்சங்கப் வேலை நிறுத்தம் மூலம் அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அசைத்துப் பார்த்ததாக புகழப்படுபவர்.

அந்தப் போராட்டத்தை நடத்திய ஆல் இந்தியா ரயில்வேமென் ஃபெடரேஷனின் தலைவராக இருந்தவர் ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ்.

அனைத்திந்திய அரசியல் தலைவர்களிலேயே இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனி ஈழம் உருவாவதை ஆதரித்த வெகுசில தலைவர்களில் ஒருவர் பெர்ணான்டஸ்.

வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்தவர். அப்போது, வெளியான கார்கில் சவப்பெட்டி ஊழல் குற்றச்சாட்டு, அவரது புகழுக்கு களங்கமானது.

கடைசி காலத்தில் அல்ஸைமர்ஸ் என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

“கடும் காய்ச்சலிலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்த ஜார்ஜ், இன்று காலை சுமார் ஆறு மணியளவில் டெல்லியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்” என்று ஜார்ஜின் உறவினரான டோனா பெர்னாண்டஸ் பிபிசியிடம் கூறினார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *