முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இலங்கையில் தமிழ் மக்களுக்கான சமத்துவம் கிடைக்க வாய்ப்பே இல்லை

1646

ரவிராஜ் கொலைவழக்கிற்கு வழங்கிய தீர்ப்பின் மூலம், இலங்கை நாட்டிற்குள் தமிழ் மக்களிற்கான சமத்துவம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று என்னவே தோன்றுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அதிகாலையில் வழங்கிய தீர்ப்பின் மூலம் இலங்கை நாட்டிற்குள் தமிழ்மக்களுக்கான சமத்துவம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், அதிகாலை என்பது விடிவிற்கானது என்ற போதிலும், அன்றைய தீர்ப்பு எமது இருளுக்கானதா என்ற அச்சம் தோன்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களிற்கான சமத்துவத்தினை இலங்கையின் ஆட்சியாளர்கள் என்றுமே வழங்க முன்வர மாட்டார்கள் என்பது இத் தீர்ப்பின் மூலம் நிரூபனமாகியுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பட்டப்பகலில் பல்லாயிரக் கணக்காணோரின் கண்முன்னே இடம் பெற்ற அந்த கொலைச் சம்பவத்திற்கு, பெருமளவு ஆதரங்கள் , சாட்சிகள் எல்லாம் நெறிப்படுத்தப்பட்ட நிலையிலும், இதுதான் தீர்ப்பு என்றால், அர்த்த சாமத்தில் இடம்பெற்ற கொலைகளுக்கும், மூடிய அறைகளுக்குள்ளேயும், யாருமே அற்ற பிரதேசங்களிலும் இடம்பெற்ற இலட்சக்கணக்கான மரணங்களுக்கும் ஒருபோதுமே நீதி கிடைக்கப்போவதில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

அழிக்கப்பட்ட எமது இனத்திற்கான நீதி என்றுமே மறுக்கப்பட்ட நீதியாகவே கானப்படப்போகின்றது என்ற அச்சம் தற்போது தம்மைச் சூழ்வதாகவும், இந்தக் கொலைக்கான தீர்ப்பின் மூலம் ஒரு நாட்டிற்குள் சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றாக சமத்துவமாக வாழ முடியாது என்பதனை அரசாங்கம் கூறிவிட்டதாகவே எண்ணவேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்களச் சிப்பாய்களிற்காக இரவு இரவாக விசாரணைகளை மேற்கொள்ளும் அரசாங்கம், கடந்த ஒன்பது ஆண்டுகளாக அநுராதபுரம் சிறைச்சாலையினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 8 தமிழ் சந்தேக நபர்களிற்கு இன்றுவரை விளக்க மறியல் நீடிப்பை மட்டுமே வழங்கிவருகிறது எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அவர்களுக்கு எந்தவிதமான விசாரணையோ, பிணையே கிடையாது எனவும், 8பேரினதும் ஆயுள் வெறும் விளக்க மறியலிலேயே முடியப்போகும் நிலைதான் ஏற்படும் என்ற கைதிகளின் அச்சத்தினை தாமும் நம்பவேண்டிய நிலையிலேயே உள்ளதாகவும் சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *