முக்கிய செய்திகள்

இலங்கையில் மீண்டும் தாக்குதல் திட்டம்: இந்திய உளவுத்துறை எச்சரிக்கை!

273

தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை இலங்கை அதிகாரிகளை எச்சரித்துள்ளது.

இரண்டாம் கட்டத் தாக்குதல் ஒன்றுக்கு அந்த அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழிநடத்தலில் தயாராவதாக இந்திய உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையும் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், தாக்குதலின் இலக்கு உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்த உளவு மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக இந்தியா இலங்கையின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *