முக்கிய செய்திகள்

இலங்கை அரசாங்கப் படையினரால் தமிழ் மக்கள் இனவழிப்புச் செய்யப்பட்டதனை எந்தவொரு நேரத்திலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வீஸ்வநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்

299

இலங்கை அரசாங்கப் படையினரால் தமிழ் மக்கள் இனவழிப்புச் செய்யப்பட்டதனை எந்தவொரு நேரத்திலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வீஸ்வநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

போர்க் காலப் பிரச்சினைகளை மறப்போம் மன்னிப்போம் என்று அண்மையில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சியில் வைத்து கூறியிருந்தார்.

இந்தக் கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கருத்து வெளியிட்டுள்ளது.

இனப்படுகொலைக்கு உள்ளாகி, உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைகளாக வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் எதனையும் மறுக்கவோ மன்னிக்கவோ முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன அழிப்பினை மேற்கொண்ட தரப்பினரே இன்றைய தினம் வரையில் இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் பதவி வகித்து வருவதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன அழிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரசாங்கத் தலைவர்கள் மற்றும் இராணுவப் படைத்தளபதிகள் தண்டிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்த நிலையிலும், தமிழ் மக்களின் உரமைகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம், மன்னிப்பு என்ற பிரச்சாரங்களின் உடாக தமிழ் மக்கள் மீளவும் அடிமைகளாக்கப்படக் கூடும் என தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *