இலங்கை அரசினது தடைகளை தாண்டி யாழ்.பல்ககையில் மாவீரர்களிற்கான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

145
இலங்கை அரசினது தடைகளை தாண்டி யாழ்.பல்ககையில் மாவீரர்களிற்கான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைகழகவளாகத்தில் உள்ள மாவீரார் நினைவு தூபியில் மாவீரார் நாள் நினைவேந்தலை நடாத்துவதற்கான சகல ஒழுங்குகளையும் பல்கலைக்கழக மாணவார்கள் நேற்றைய தினமே மேற்கொண்டிருந்தனர்.
எனினும் இன்று மாணவர்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.எனினும் காவல் தடைகளை தாண்டி உள்ளே புகுந்த மாணவர்கள் நினைவு தூபி பகுதியில் சுடரேற்றி மலர் தூவி தற்போது அஞ்சலித்துக்கொண்டிருக்கின்றனர்.
மாவீரார் நாள் நினைவேந்தல் வடகிழக்கு மற்றும் புலம்பெயார் தேசங்களில் உணர்புபூர்வமாக அனுட்டிக்கப்படவுள்ளது. இந்நிலையில் யாழ்.பல்கலைகழக வளாகத்திலும் மாவீரார் நாள் நினைவேந்தல் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று மாலை யாழ்.பல்கலைகழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி க.கந்தசாமி யாழ்.பல்கலைகழக வளாகத்தில் 26, 27ம் திகதிகளில் எந்தவொரு நிகழ்வுகளும் நடாத்தகூடாது என தடை விதித்துள்ளார்.
எனினும் யாழ்.பல்கலைகழக மாணவர்களால் மாவீர் தினத்திற்கான ஒழுங்குகள் முன்னதாகவே ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதன்படி நண்பகல் 12 மணியளவில் மாவீர் நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து 1000 மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளதாகவும்;, மாலை 6மணி 5 நிமிடத்திற்கு மாவீர்களுக்கான ஈகை சுடரேற்றப்பட்டு அஞ்சலி இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தடை தாண்டி நேரகாலத்துடன் சுடரேற்றி அஞ்சலி நடந்து கொண்டிருக்கின்றது.
நூற்றுக்கணக்கான மாணவிகள் மற்றும் மாணவர்கள் திரண்டு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கின்றனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *