முக்கிய செய்திகள்

இலங்கை தமிழர்களை உலகில் யாராலும் எதுவும் செய்துவிட முடியாதென தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக்

520

இலங்கை தமிழர்களை உலகில் யாராலும் எதுவும் செய்துவிட முடியாதென தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் அவர்களை அசைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுவாமி விபுலானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவு தினத்தினை குறிக்கும் வகையில் மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய விவேக் இவ்வாறு குறிப்பிட்டார்.
இரண்டாம் நூற்றாண்டிலிருந்து ஒரு பழைமைவாய்ந்த, தொன்மையான பூமி இலங்கையென அவர் கூறினார்.
சுமார் 35000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை வரலாற்று ஆசிரியர்கள் எடுத்த ஒரே பூமி இலங்கையென பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு வளங்களைக் கொண்ட ஆசீர்வதிக்கப்பட்ட பூமியான இலங்கையில், மக்களிடம் ஒற்றுமை இருந்தால் உலகில் இலங்கை மக்களை விஞ்சியவர்கள் யாரும் இருக்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *