முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இலங்கை தொடர்பில் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளது இதுதான்

300

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்வதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை வரவேற்பதாகவும் இவ்விவகாரத்திற்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் பன்னாட்டு இராஜதந்திரிகள் தமது உத்தியோகப்பூர்வ கீச்சக பக்கங்களில் பதிவேற்றியுள்ளனர் .

கட்டாயத்தகனம் தொடர்பான ஐ.நா அறிக்கையை மேற்கோள்காட்டி பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தனது கீச்சக பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், ‘ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களிடமிருந்து மிகத்தெளிவான செய்தியொன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை சர்வதேச சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையிலும், தத்தமது மதநம்பிக்கைகளின் பிரகாரமும் அடக்கம் செய்வதற்கு அவர்களது குடும்பத்தினர் அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேவேளை ‘ சிறிலங்காவில் முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டாயத்தகனம் தொடர்பில் மிகவும் வலுவானதொரு அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயத்திற்கு உடனடியாகத் தீர்வுகாணப்பட வேண்டும்’ என்று கனேடியத்தூதுவர் டேவிட் மக்கினொன் அவரது  பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மிகமுக்கிய அமர்வு விரைவில் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது ஒருமித்த தீர்வொன்றை அடையமுடியும் என்று நம்புகின்றோம்’ என்று ஜேர்மனியத்தூதுவர் ஹோல்கர் சீபர்ட் பதிவிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *