இலஞ்ச மற்றும் ஊழல் வழக்கிலிருந்து ரோஹித அபேகுணவர்தன விடுவிப்பு

33

சட்டவிரோத சொத்துக் குவிப்பு தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்கில் இருந்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சராக செயற்படும் போது ரோஹித அபேகுணவர்தன 412 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தினார் என்று இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ஆதித்யா படபெதிகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மூவரினதும் எழுத்துமூல அனுமதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *